சென்னை:

தமிழகத்தில் நீதிமன்றங்களை முழுமையாக நடத்தலாமா என்பது குறித்து தலைமை நீதிபதி நாளை தமிழக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

முன்னதாக  இன்று  (29ந்தேதி)  தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலஅனைத்த  நீதிபதிகளிடம் காணொளி காட்சி மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா பரவல் தடுப்பு பணியாக  நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மே 3ந்தேதியுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரமாகி வருவதால், ஊரடங்கு தளர்த்தப்படுவது தொடர்பாகவும் பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில்,  சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி (ஏபி சாஹி), ஏப்ரல் 29 ஆம் தேதி, அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அனைத்து நீதிபதிகளிடமும்,  நீதிமன்றங்கள் செயல்படும் முறை குறித்து காணொளி காட்சி மூலம் விவாதிக்க இருப்பதாக  ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, நாளை தமிழகஅரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.