சென்னை:

விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு, விவசாய பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்யலாமே? என சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்து உள்ளது.

விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க, விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில்  உள்ளது. இதனால் விளைந்த பயிர்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வழக்கு விசாரணையின்போது கருத்து தெரிவித்தநீதிபதிகள், இந்த ஊரடங்கு காரணமாக, விவசாயிகளின் நிலைமை மோசமாகி உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்படை யாமல் இருக்க விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன்,  பாதிக்கப்படும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை  காக்கும் வகையில் அவர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் வரையில் கடன் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகளின்  பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.