வழக்குகளால் என்னை மிரட்ட முடியாது! டிடிவி தினகரன்

சென்னை,

பொய் வழக்குகள் போட்டு தன்னை மிரட்ட முடியாது என  டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

சென்னை அடையாறில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினரகன்,  தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளுக்காக முன்ஜாமீன் கேட்க மாட்டேன் என்று கூறினார்.

தன்மீத தேச துரோக வழக்கு பதிந்துள்ள, திருச்சி துண்டு பிரசுரத்தை நான் பார்த்தேன். அதில்  தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யும்படியான வாசகங்கள் எதுவும் இல்லை என்று கூறினார்.

மேலும் வழக்கு தொடர்ந்தவர்கள் மீது சட்டப்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரஉள்ளதால், அதனால் ஏற்பட்டுள்ள கோபத்தால் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும தினகரன் தெரிவித்தார்.

மேலும்,  18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் என்றும் தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
English Summary
can not threaten me through cases ! ttv dhinakaran