சென்னை: சென்னை  மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் முதன்முறையாக பரிசார்த்த முறையில் யுபிஐ மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுக்கப்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே கர்நாடக உள்பட சில மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னையில் நடைமுறைக்கு வந்துள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது. சாதாரண பூ விற்பனை செய்யும் வியாபாரிகள் உள்பட அனைத்து பரிவர்த்தனைகளும் டிஜிட்டலுக்கு மாறி உள்ளன. இதன் தொடர்ச்சியாக பேருந்துகளிலும் பயணச்சீட்டு பெற யுபிஐ வசதியை தமிழ்நாடு அரசு சோதனை முறையில் அமல்படுத்தி உள்ளது.,

முதல்கட்டமாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பல்லாவரம் பேருந்து பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளின் நடத்துநா்களுக்கு யுபிஐ மற்றும் காா்டுகள் மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டு வழங்கும் வகையிலான புதிய கையடக்கக் கருவிகளை மாநகர போக்குவரத்துக்கழகம் வழங்கி இருக்கிறது.

அதற்காக பேருந்து நடத்துனர்களுக்கு  யுபிஐ மற்றும் கார்டுகள் மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி டிக்கெட் வாங்கும் புதிய கையடக்கக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த டச் ஸ்கிரீன் சாதனங்கள், பயணிகள் ஏறுமிடம் மற்றும் சேருமிடத்தையும் தேர்வு செய்து நடத்துனர் டிக்கெட் கொடுப்பார்.

தொடுதிரை வசதி கொண்ட இந்த கருவியில், பயணிகள் ஏறுமிடம் மற்றும் சேருமிடத்தையும் தோ்வு செய்து அதற்கான கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. மேலும், இக்கருவி மூலம் காா்டு மற்றும் யுபிஐ, க்யூஆா் குறியீடு பயன்படுத்தி பயணச்சீட்டு வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த கருவியில் தேவையான தகவல் வழங்கப்பட்டவுடன், பணம், கார்டுகள் மற்றும் UPI உள்ளிட்ட பல்வேறு கட்டண விருப்பங்களுடன் கட்டணம் பெறப்பட்டு டிக்கெட் வழங்கப்பட உள்ளது.

இந்த கருவியில் டிக்கெட் பெற UPI பயன்முறை தேர்ந்தெடுக்கப்பட்டால், QR-குறியீடு திரையில் காட்டப்படும், பயணிகள் தங்கள் போன்களை பயன்படுத்தி ஸ்கேன் செய்து பணத்தை செலுத்தாலம்.

சோதனைத் திட்டமாக இதை மாநகர போக்குவரத்து கழகம் செயல்படுத்தி உள்ளது.  அதன் வெற்றி, பயன்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள மற்ற டெப்போக்களுக்கும் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்த கட்டமைப்பின் கீழ், பயணிகள் மொபைல் செயலியைப் பயன்படுத்தி தங்கள் கணக்குகளை ரீசார்ஜ் செய்துக்கொண்டு பேமெண்ட் செய்ய முடியும். இந்த செயலிலையை MTC பேருந்துகளில் தவிர சென்னை மெட்ரோ ரயில் மற்றும் உள்ளூர் ரயில்கள் பயணிக்க பயன்படுத்தலாம்.

இந்த பொதுவான டிக்கெட் முறையின் மூலம் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (Cumta) பெறும் வருவாய் MTC மற்றும் CMRL மற்றும் தெற்கு ரயில்வே போன்ற பிற போக்குவரத்து அமைப்புகளுக்கு பகிர்ந்து கொள்ளப்படும்