சென்னை: பள்ளி வாகனங்களின் முன்புறம், பின்புறம் ஆகிய இருபுறமும் கேமரா பொருத்தப்பட வேண்டும், இது கட்டாயம் என்று தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. பள்ளி வாகனங்களில் சிக்கிமாணவர்கள் விபத்துக்குள்ளாவதைத் தடுக்கும் வகையில், அனைத்து பள்ளி பேருந்துகளிலும் கேமரா, சென்சார் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

பள்ளி வாகனங்களில் பள்ளி சிறார்கள் பலியாவது அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வருகின்றன. அதன் ஒருபகுதியாக. பள்ளி வாகனங்களில் முன்புறமும், பின்புறமும் கேமராவும், பின்பகுதியில் சென்சார் கருவியும் கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  அதன் தொடர்ச்சியாக மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான வரைவு, கடந்த ஜூன் 29-ம்தேதி உள்துறைச் செயலரால் அரசிதழில் வெளியிடப்பட்டது. இது தொடர்பான உத்தரவை வெளியிட அரசின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த உத்தரவு தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,  பள்ளி பேருந்துகளில் முன்புறமும், பின்புறமும் கேமராவும், பின்பகுதியில் சென்சார் கருவியும் கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

[youtube-feed feed=1]