சென்னை: விசிக தலைவர் திருமாவளவன், தனது கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொள்ள தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார்.
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை திமுகவின் கூட்டணி கட்சியான விசிக நடத்துகிறது. இதில் கலந்துகொள்ள அதிமுக உள்பட பல கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில், திமுகவுக்கு அழைப்பு விடுக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்தது. மதுவின் வருமானத்தில்தான் தமிழ்நாடு அரசு நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் மதுஒழிப்புக்கு சாத்தியம் இல்லை என ஏற்கனவே அமைச்சர்கள் பலர் கூறியுள்ளனர்.
இதனால் விசிக தலைவர் திருமா, முதலமைச்சர் ஸ்டாலினை அழைப்பாரா என்பது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், விசிக தளத்தில், ஏற்கனவே திருமா பேசிய, . ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டு பேசிய வீடியோ வெளியாdது இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று காலை முதலமைச்சரை சந்திக்க செல்லும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய திருமா,
சலசலப்புக்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார் திருமாவளவன், மதுவிலக்கை பேசுவதால் கூட்டணியில் விரிசல் வந்தாலும், பாதிப்பு வந்தாலும் அதனை எதிர்கொள்ள விடுதலை சிறுத்தைகள் தயாராக இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.
இது மேலும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த சலசலப்புக்கு மத்தியில், இன்று காலை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேசினார். அப்போது, விசிக மகளிர் அணி நடத்தும் மதுஒழிப்பு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார். இநத் சந்திப்பின்போது விசிக எம்.பி. ரவிக்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “முதலமைச்சருடன் நடைபெறும் சந்திப்பின்போது மதுவிலக்கு மாநாடு குறித்தும் ஆலோசிப்பேன், அழைப்பும் விடுப்பேன். அரசியலுக்காக விசிக மதுவிலக்கு மாநாட்டை நடத்தவில்லை” என்று கூறினார்.