டில்லி

த்திய கணக்குத் தணிக்கை நிறுவனம் (CAG) சமீபத்தில் வெளியிட்ட கங்கை நதியை அசுத்தமாக்கும் நிறுவனங்கள் பட்டியலில் “பதஞ்சலி”யும் இடம் பெற்றுள்ளது.

கங்கை நதியை சுத்திகரிக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவது தெரிந்ததே.   இந்த நதியை அசுத்தமாக்கும் நிறுவனங்கள் குறித்து மத்திய கணக்குத் தணிக்கை நிறுவனமான சிஏஜி  (Comptroller and audit General) ஒரு பட்டியல் வெளியிட்டுள்ளது.  அதில் சுமார் 180 நிறுவனங்கள் பட்டியில் இடப்பட்டுள்ளன.

அந்தப் பட்டியலில் புகழ் பெற்ற நிறுவனங்களான சரோவர் போர்டிகோ,  சோட்டிவாலா உணவு விடுதிகள் நிறுவனம் மற்றும் மத்திய அரசின் செல்லப் பிள்ளை என கூறப்படும் பதஞ்சலி ஆகியவைகளும் அடங்கும்.    இந்த நிறுவனங்களுக்கு ஏற்கனவே கங்கை நதி சுத்திகரிப்பு பணிகள் நடத்தும் அரசு நிறுவனங்கள் எச்சரிக்கை அறிக்கைகள் அளித்துள்ளன.   அயினும் பதஞ்சலி உட்பட பல நிறுவனங்கள் செவி சாய்க்கவில்லை.

இதுவரை அரித்வாரில் உள்ள ஐந்து ஆசிரமங்கள் மட்டும் அவைகள் முழுவதுமாக மூடப்படும் என எச்சரிக்கை விடுத்த பின் தங்களது கழிவை கங்கையில் கலப்பதை நிறுதிக் கொண்டுள்ளன.    தற்போது அங்கு நடமாடும் நீதிமன்றம் அமைக்கப்பட்டு கங்கை நதிக்கரையில் குளிப்பவர்கள், சோப்பு, ஷாம்பு மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்றவை உபயோகப்படுத்தும் போது பிடிக்கப்பட்டு உடனடி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மத்திய கணக்குத் தணிக்கை நிறுவனத்தின் அறிக்கையின் படி பிரதமரின் தொகுதியான காசி மிகவும் மாசுப்பட்ட கங்கை நதிக்கரை நகரமாக உள்ளது.    கங்கை நதிக்கரையில் உள்ள அதிகம் மாசுபட்ட ஆறு நகரங்களில் காசியும் உள்ளது.   காசியில் நீராடினால் பாவம் போகும் என்பது நம்பிக்கை   ஆனால்   உத்திரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் உட்பட பல இடங்களில் கங்கை நதியின் நீர் குளிக்கக் கூட லாயக்கில்லாத நிலையில் உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.