சீனாவில் பிரபல முதலீட்டு நிறுவனமான பைட்டான்ஸ் தற்போது டிக்டாக், ஹெலோ போன்ற செயலிகளை வெளியிட்டு உலக அளவில் பேஸ்புக் செயலியை தாண்டி பெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்தியாவில் தனி மனித ஒழுக்கத்திற்கு எதிராக இருப்பதாக அந்த செயலி தடை செய்யப்பட்டு மீண்டும் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் அந்நிறுவனம் இலண்டனைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு வழியாக இயங்கும்
Jukedeck என்ற இசை செயலி நிறுவனத்தினை கையகப்படுத்தியுள்ளது.

லண்டனை சேர்ந்த எட் நியூட்டன்-ரெக்ஸ், Jukedeck    செயலியின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி
இவரின் சமீபத்தில் லிங்க்டுஇன் பக்கத்தில் பைட்டான்ஸ் நிறுவனத்தின் AI லேப் இயக்குனராக இருப்பதாக தெரிவித்ததன் அடிப்படையில்தான் இந்த விசயம் வெளியே தெரிய வந்திருக்கிறது

டிக்டாக்  வளர்ச்சியை 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019ம் ஆண்டு 588% வளர்ச்சி அடைந்துள்ளதாக சென்சார்டவடர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

=செல்வமுரளி