சென்னை: அக்டோபர் 15ம் தேதிக்குள் மழைநீர் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரி முடிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
வடகிழக்கு பருவம தொடங்க உள்ள சமயத்தில், மழைநீர் கால்வாய்கள் தூர் வாரும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருவது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், தூர் வார குறைந்த பட்சம் இரண்டு முதல் 3 மாதங்கள் ஆகும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த மாதம் (அக்டோபர்) 15ம் தேதிக்குள் மழைநீர் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரி முடிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிகமாக மழைநீர் தேங்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்போதே படகுகள் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. மேலும் உணவு பொருட்களும் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. அதோடு தன்னார்வலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க சுமார் ஞரு.4000 கோடி ரூபாயில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், இதனால் இனிமேல் சென்னையில் மழைநீர் தேங்காது என முதல்வர் ஸ்டாலின், மேயர் பிரியா உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் கூறி வந்த நிலையில், நடப்பாண்டும் மழை காலத்தில் மழைநீர் தேங்கும் அவலம் நீடிக்கும் என்பது சாதாரணமாக பெய்யும் மழைக்கே சாலையில் தண்ணீர் தேங்குவதன் மூலம் உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில், சென்னைக்கு 36 படகுகளை வாங்கியுள்ள சென்னை மாநகராட்சி, அக்டோபர் 15ம் தேதிக்குள் மழைநீர் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரி முடிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; நீர்வழிகளான கால்வாய்கள், மற்றும் ஆறுகளை நீர்வளத்துறை போன்ற மற்ற சேவை துறைகளுடன் இணைந்து மாநகராட்சி தூர்வாரியும், சுத்தம் செய்தும் வருகிறது. மழைநீர் கால்வாய்கள் அனைத்தும் வருகிற அக்டோபர் 15ம் தேதிக்குள் தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்படும். மழைக் காலத்தை எதிர்கொள்ள அனைத்து பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
பருவமழை தொடங்கும் நேரத்தில் வடிகால் பணி! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம்…
இந்த ஆண்டும் வெள்ளத்தில் தத்தளிக்குமா சென்னை….? 36 படகுகளுடன் சென்னை மாநகராட்சி தயார்…