ஈரோடு:
ரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எந்த பிரச்சனையுமின்றி, அமைதியாக நடைபெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் 75 சதவிகித வாக்குகள் பதிவானதாகவும் கூறினார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அந்த தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 238 வாக்குச் சாவடிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று முடிந்தது. நேற்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை 6 மணி நிலவரப்படி தொகுதியில் 74.69 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் கூறினர்.

வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார்,  இடைத்தேர்தல் எந்த பிரச்சனையுமின்றி, அமைதியாக நடைபெற்றதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர் தேர்தல் தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

 ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, கடந்த மாதம் 4ம் தேதி மரணமடைந்ததையடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.  திமுக கூட்டணியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக ஆனந்த், நாம் தமிழர் மேனகா உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர்.