டில்லி

ரிசா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வன்முறைக்கு வாய்ப்புள்ள பிஜேப்பூர் தொகுதி உட்பட 3 சட்டப்பேரவை தொகுதியில் இன்று இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

இன்று ஒரிசாவின் பிஜேப்பூர்,  மத்தியப் பிரதேசத்தின் மங்காலி,கொலாரஸ் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.   இந்த தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்களும்,  வாக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரஙக்ளும் உபயோகப் படுத்தப் படுகின்றன.  இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்படுள்ளது.  இந்த தேர்தல்களின் முடிவுகள் வரும் 28ஆம் தேதி தெரிய வரும்.

இந்த 3 தொகுதிகளில் ஒரிசாவின் பிஜேப்பூர் தொகுதியில் வன்முறைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.   அதனால் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   இங்கு துணை ராணுவத்தினர் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.   காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சுபல் சாஹு மரணம் அடைந்ததை முன்னிட்டு இங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.   மறைந்த உறுப்பினரின் மனைவி ரீட்டா சாஹு (பிஜு ஜனதா தளம்) உட்பட 43 பேர் களத்தில் உள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இரு தொகுதிகளும் காங்கிரஸ் வசம் இருந்தவை ஆகும்.   அங்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் மரணம் அடைந்ததை ஒட்டி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.   இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை நடைபெற இருப்பதால் மத்தியப்பிரதேசத்தை ஆளும் பாஜக இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற கடும் முயற்சி எடுத்து வருகிறது.   காங்கிரசும் இந்த இரு இடங்களையும் தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராடி வருகிறது.