சென்னை:
தமிழ்நாடு சட்டமன்ற 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது அதிமுக கட்சி.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை அதிமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவின்படி, அரவக்குறிச்சி தொகுதியில் திரு.V.செந்தில்பாலாஜியும், தஞ்சாவூர் தொகுதியில் தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M.ரெங்கசாமியும் கழக வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.\
இதேபோன்று, திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.A.K.போஸ்,
புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஓம்சக்தி சேகர் ஆகியோர் கழக வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதாக தலைமைக் கழக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை தான் அதிமுக அறிவித்துள்ளது.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 19ம் தேர்தல் நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழகத்தில் கடந்த மே மாதம் சட்டசபை தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதனால் அங்கு தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சீனிவேல் உடல் நலக்குறைவால் காலமானார். அவர் பதவி ஏற்கும் முன்னரே காலமானதால் திருப்பரங்குன்றம் தொகுதி காலியானது.
இதனையடுத்து இந்த தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் இந்த மூன்று தொகுதிகளுக்கும் நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெயர்களை அறிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel