சென்னை,
மிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை பெற்று வருகிறது.
புதுவையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி வெற்றி பெறும் நிலையில் உள்ளார். அவரது வெற்றி உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த 19-ஆம் தேதியன்று நடந்தது. அவரக்குறிச்சியில் அதிகபட்சமாக 81.86 சதவீதமும், திருப்பரங்குன்றத்தில் 71.04 சதவீதமும், தஞ்சாவூரில் 69.41 சதவீத வாக்குகளும் பதிவாகின.
மூன்று தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் மிகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன.
அரவக்குறிச்சியில் பதிவான வாக்குகள் கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியிலும்,
தஞ்சாவூர் தொகுதியில் பதிவானவை குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கலைக் கல்லூரியிலும், திருப்பரங்குன்றம் தொகுதியில் பதிவான வாக்குகள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும் வைத்து எண்ணப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது.
3 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது.
admk

தஞ்சாவூர் :

அதிமுக எம்.ரெங்கசாமி  – முன்னிலை
திமுக திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி
தேதிமுக அப்துல்லா சேட்
பாரதிய ஜனதா ராமலிங்கம்

அரவக்குறிச்சி

அதிமுக செந்தில் பாலாஜி – முன்னிலை
திமுக கே.சி பழனிச்சாமி
தேமுதிக அரவை முத்து
பாரதிய ஜனதா பிரவீன்

திருப்பரங்குன்றம்

அதிமுக ஏகே. போஸ்  – முன்னிலை
திமுக சரவணன்
தேமுதிக  தனபாண்டியன்
பாரதிய ஜனதா சீனிவாசனன்

புதுவை – நெல்லித்தோப்பு

அதிமுக ஓம்சக்தி சேகர்
narayanasamy
காங்கிரஸ் நாராயணசாமி  – வெற்றி பெறுவது உறுதியானது