பாட்னா,

பாரதியஜனதா கூட்டணியுடன் ஆண்டு வரும் பீகார்  மாநிலத்தில் மாவட்ட கலெக்டர் ஒருவர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார்  மாநிலம் பக்சர் மாவட்ட ஆட்சியராக இருந்து வருபவர் முகேஷ் பாண்டே. இவர் 2012ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் ஆபீசர்.

இவர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதில், அவரது உடல் இரண்டு துண்டாக ரெயில்வே தண்டவாளத்தில் கிடந்தது.

இவர் இரு தினங்களுக்கு முன்பு பாட்னாவிற்கு செல்ல உள்ளதாக சக அதிகாரிகளிடம் கூறி விட்டு காஜியாபாத் சென்றுள்ளார். ஆனால், அவர் காசியாபாத் பகுதிக்கு சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் இடம், நெரிசல் மிகுந்த, அதிக ரெயில் போக்குவரத்து உள்ள காசியாபாத் – அவுரா ரெயில்வே லைனில், அலிகாருக்கும் கான்பூருக்கும் இடையில் உள்ளது.

இதையறிந்த ரெயில்வே போலீசார் அவரது உடலை மீட்டனர். அப்போது அவரது உடல் அருகே நோட்புக் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில் அவர் தற்கொலை செய்வதாக எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.

அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு, டில்லி லீலா பேலஸ் ஓட்டலில் உள்ள ஒரு நபரை அழைத்திருந்ததும், சம்பவ இடத்திலிருந்தும் ஹோட்டலின் அட்டை கண்டுபிடிக்கப்பட்டது.

தற்கொலை செய்துகொள்வதாக மற்ற நபருக்குத் தெரியப்படுத்துவதற்காக இந்த அழைப்பு செய்யப்பட்டதாகவும், பின்னர், அதைத் தொடர்ந்தே அவரது உடல் காசியாபாத் அருகே ரெயில்வே டிராக்கில் கண்டுபிடிக்கப்பட்டது, மாவட்ட நீதிபதி மரணம் குறித்து, அவரது குடும்பத்தினர் மற்றும் தடயவியல் குழுக்களுக்கு தகவல் கொடுத்துள்ளோம் என்றும் போலீசார் கூறினர்.

ஐஏஎஸ் படித்த  மாவட்ட ஆட்சியர் ஒருவரே ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் அரசியல் பிரஷர் காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாண்டேவின் மரணத்துக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வருத்தம் தெரிவித்து உள்ளார்