புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பேருந்து டிக்கெட் கட்டணம் உயரவு அறிவிக்கப்பட்டு உள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் சிறிய அளவில் உயர்த்தப்பட்டு இருப்பதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது. இந்த கட்டண உயர்வு ஓரிரு நாளில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, குறைந்தபட்சம் 2 ரூபாய், அதிகபட்சம் 8 ரூபாய் அதிகரித்தது டிக்கெட் கட்டணம், குளிர்சாதன வசதி இல்லாத நகரப்பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 5-ரூபாயிலிருந்து 7-ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 13-ரூபாயிலிருந்து 17-ரூபாயாகவும் உயர்வு. குளிர்சாதன வசதி கொண்ட நகரப்பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 10-லிருந்து 13-ரூபாயாக உயர்வு. குளிர்சாதன வசதி கொண்ட நகரப்பேருந்துகளின் அதிகபட்ச கட்டணம் 24-லிருந்து 36-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இறுதியாக,கடந்த 2018 ஆம் ஆண்டு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது அதையடுத்து தற்போது ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாநில போக்குவரத்து துறை கூடுதல் செயலர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏ.சி., வசதி இல்லாத டவுன் பஸ்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் 5-ல் இருந்து 7 ரூபாய் ஆகிறது., அதிகப்பட்ச கட்டணம் 13-ல் இருந்து 17 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது குறைந்த பட்சம் 2 ரூபாய், அதிகபட்சம் 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏ.சி., டவுன் பஸ் குறைந்தபட்ச கட்டணம் 10-ல் இருந்து 13 ஆகவும், அதிகபட்ச கட்டணம் 26-ல் இருந்து 34 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது குறைந்தபட்ச கட்டணம் 3-ம், அதிகப்பட்ச கட்டணம் 8 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
டீலக்ஸ் நான் ஏ.சி., பஸ்களுக்கு, ஏ.சி., டவுன் பஸ்களுக்கான கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் டீலக்ஸ் ஏ.சி., பஸ்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் 12-ல் இருந்து 16 ஆகவும், அதிகபட்ச கட்டணம் 36-ல் இருந்த 47 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏ.சி.. அல்லாத எக்ஸ்பிரஸ் பஸ்கள் புதுச்சேரி எல்லைக்குள் கி.மீ.,க்கு 0.75 பைசா என்பது 0.98 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
25 கி.மீ., வரை 20 என, இருந்த குறைந்தபட்ச கட்டணம் 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏ.சி., எக்ஸ்பிரஸ் பஸ்கள் புதுச்சேரி எல்லைக்குள் கி.மீ., 1.30 என்பது தற்போது ரூ.1.69 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதல் 25 கி.மீ., 50 ரூபாய் வசூலிக்கலாம்.
புதுச்சேரி நகர பகுதிக்குள் ஏ.சி., வால்வோ பஸ் கி.மீ.,க்கு 1.70 என்பது தற்போது 2.21 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, முதல் 30 கி.மீ.,க்கு 54 ஆக இருந்த கட்டணம் தற்போது 70 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்த கட்டண உயர்வு முதல்வர் அறிவிப்புக்குப் பிறகு ஓரிரு நாட்களில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.