சென்னை:
ரசு பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் பேடிஎம் (PayTM)  எனப்படும் டிஜிட்டல் முறையில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும்,  10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும்  மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் உள்பட பல்வேறு அறிவிப்புகளை தமிழக  போக்குவரத்துக்கு துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஜூன் 30ந்தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் ஜூன் 30 வரை 5 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகளும் 60% பயணிகளுடன் இயங்கலாம் என  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, இன்று முதல் அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து, மற்ற மண்டலங்களில் இன்று முதல் அரசு பேருந்துகள் 50% பயணிகளுடன் மண்டலங்களுக்குளேயே இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,   காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயக்கப்படும்.  மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும். 2 அரசு பேருந்துகளில் சோதனை முயற்சியாக paytm மூலம் கட்டணம் வசூலிப்பது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து பணிகளிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்க முடிந்தவரை மின்னணு முறையை பயன்படுத்தலாம் என்று கூறியவர், அரசு பேருந்து ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்படவில்லை என ர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது என்று கூறியவர்,  பொதுத்தேர்வு எழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் பேருந்து சேவை இயக்கம் தொடங்கும் என்று கூறியவர், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பஸ் ஓடும்  என்றும், கன்னியாகுமாரி பேருந்து நிலையத்திலுள்ள மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்பட்டு பேருந்துகள் ஓடத் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.