சென்னை: பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் பயணித்திற்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுமுறை தினங்கள், மற்றும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் நகர்ப்புறங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக தமிழ்நாடுஅரசின் போக்குவரத்து துறை ரெகுலராக இயங்கி வரும் பேருந்துகளுடன் ஆயிரக்கணக்கில் சிறப்பு பேருந்துகளையும் இயக்கி வருகிறது. இருந்தாலும் மக்களுக்கு தேவையான பேருந்துகள் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் அரசை கண்டித்து நள்ளிரவில் பொதுமக்கள் பேருந்து நிலையங்களில் போராட்டம் நடத்துவதும் வாடிக்கையாகி வருகிறது.
இதற்கு காரணம், ஊரகப் பகுதிகளில் உள்ள அரசுப்பேருந்துகளை விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சிறப்புப் பேருந்துகளாக இயக்குவதால், ஊரகப் பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனால் அரசு மீத மக்களின் அதிருப்தி அதிகரித்து வருகிறது. மேலும், அரசிடம் போதுமான பேருந்துகள் இல்லை.
இந்த நிலையில், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் பேருந்துகளில் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டு உள்ளது.
இந்த திட்டத்தை முதல்கட்டமாக வட மாவட்ட பகுதிகளில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து, அதற்கு ஓட்டுநர், நடத்துநரை அரசே நியமித்து இயக்க திட்டமிட்டுள்ளது.
இந்த முறையின் கீழ், தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்துகளின் பராமரிப்புக்கான செலவுகளை ஏற்றுக்கொள்வார்கள் மற்றும் ஓட்டுநர்களை வழங்குவார்கள், அதே நேரத்தில் டிக்கெட் கட்டணத்தை வசூலிக்க ஒரு நடத்துனரை மாநகராட்சி நியமிக்கும். தனியார் நிறுவனங்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படும் என்றும்,
சென்னையில் இருந்து குறிப்பிட்ட ஊர்களுக்கு எத்தனை நடை பேருந்து இயக்கப்படுகிறது என்ற அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு கட்டணம் வழங்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளது. ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.
இந்த தனியார் பேருந்துகள் மாநகராட்சியால் நியமிக்கப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படும். அரசு நிர்ணயித்த கட்டணமே பயணிகளிடம் வசூலிக்கப்படும்; தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதற்கான ஒரு கிலோமீட்டருக்கு கட்டணம் இன்னும் பரிசீலனையில் உள்ளது, இருப்பினும் டெண்டர் விடப்பட்டுள்ளது
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாத நிலையில், டெண்டர் விடப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.