சென்னை: தமிழ்நாட்டில் பஸ் கட்டணம், பால் விலை உயர்கிறது என்பதை அமைச்சர் கே.என்.நேரு சூசகமாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும் பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்பட பல்வேறு சலுகைகளை அறிவித்தார். இதன் காரணமாக அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், மற்ற பணிகளை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

ஏற்கனவே கடுமையான நஷ்டத்தில் இயங்கி வந்த அரசு போக்குவரத்து துறை தமிழகஅரசின் இலவச பயணம் அறிவிப்பு காரணமாக, மேலும் பல ஆயிரம் கோடி நண்டத்தில் இயங்கி வருகிறது. சமீபத்தில் சட்டப்பேரவையில் பதில் கூறிய அமைச்சர் ராஜகண்ணப்பன், போக்குவரத்J கழகம் ரூ.48,000 கோடி நஷ்டத்தில் போய்க்கொண்டிருக்கிறது என்று புலம்பியிருந்தார்.

அதுபோல ஸ்டாலின் பதவியேற்றதும் ஆவின் பாலின் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்பட்டது.  ஆவின் பால் விலை குறைப்பால் ரூ.270 கோடி அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் உற்பத்தி, விற்பனையை பெருக்கி சரிசெய்யப்படும்  பால்வளத்துறை அமைச்சர் நாசர் 2021ம் ஆண்டு கூறியிருந்தார். இந்த நஷ்டம் தற்போது பல கோடிகளை எட்டி உள்ளது. அதே வேளையில் பால் உற்பத்தியாளர்களும், பால் விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருவதால், நிதிச்சுமையை சமாளிக்க வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு, பால் விலை, பேருந்துகட்டணங்களை உயர்த்த திட்டமிட்டு உள்ளது.

இந்த நிலையில், இன்று திருச்சியில் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் நேரு, பின்னர்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  அரசு அதிகாரிகளின் அதிக சம்பளம் காரணமாக பால்விலை, பஸ் கட்டணத்தில் சிறிதளவு மாற்றம் இருக்கும் என்றும் என விலை உயர்வு குறித்து தெரிவித்தவர்,  இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்து அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு காலத்திலும் பொருளாதார ரீதியாக ஏற்படுகின்ற போது,  மக்கள் அதை சந்திக்க வேண்டி இருக்குமே தவிர  வேண்டுமென்றே திணிப்பதில்லை.  தனியார் கொள்முதல் செய்யும்போது கட்டுப்படி ஆகவில்லை விலை ஏற்ற வேண்டும் என்கிறார்கள் . அதிகாரிகள் சம்பளம் அதிகமாக கேட்க வேண்டும் என்று கேட்கிறார்கள் . எவ்வளவுதான் அரசு மானியம் கொடுத்தாலும் சிறு அளவாவது மாறுதல் வரும்  என்று தெரிவித்துள்ளார்.