சென்னை: வெயிலில் இருந்து போக்குவரத்து தொழிலாளர்களை பாதுகாக்க அவர்களுக்கு உப்புக்கரைசல் வழங்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே தலைகாட்ட முடியவில்லை. இதற்கிடையில், வானிலை ஆய்வு மையமும் இன்னும் 5 நாட்கள் கொளுத்தும் வெயிலுடன் அனல்காற்று வீசும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இது மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், வாகனம் ஓட்டுபவர்களின் நிலை, குறிப்பாக நீண்ட தூரம் வாகனத்தை இயக்கும் அரசு மற்றும் தனியார் ஓட்டுநர்களின் நிலை, கடும் அவஸ்தைக்குள்ளாகி வருகிறது.
இதைத்தொடர்ந்து, வெயிலில் இருந்து போக்குவரத்து தொழிலாளர்களை பாதுகாக்க உப்புக்கரைசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
வெப்ப அலை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர் சிவசங்கர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; பயணிகளை பாதுகாக்கும் விதமாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.