சென்னை,

ற்காலிக ஓட்டுநர்கள் இயக்கிய இரு அரசுப் பேருந்துகள் இன்று விபத்துக்குள்ளாகின.

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். . இவர்கள் தங்களது ஓய்வூதிய நிலுவை தொகைகளை தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதற்கிடையே அரசு போக்குவரத்துக் கழகங்களில் தற்காலிகமாக தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர் நியமிகப்பட்டு அரசு பேருந்துகளை நிர்வாகம் இயக்கி வருகிறது.

இந்நிலையில் தற்காலிக ஓட்டுநர் மூலம் பண்ருட்டியிலிருந்து கடலூர் சென்ற அரசுப் பேருந்து கீழ்அருங்குணம் என்ற இடத்தில் விபத்திற்குள்ளானது. சாலையைவிட்டு வயலில் இறங்கிவிட்டது. இதில் யாருக்கும் காயமில்லை.

அதேபோல, தற்காலிக ஊழியர் ஒருவர் இயக்கிய மாநகர பேருந்து சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆவடி நோக்கி சென்ற போது ஆவடி பேருந்து நிலைய வளாக சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்திலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

“ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத்தொகையை அளிக்காமல் போராட்டத்தைத் தூண்டுவது அரசுதான். அதே நேரம் தற்காலிக பணியாளர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்கி மக்களின் உயிருக்கும் உலை வைக்கிறது” என்று ஊழியர்கள் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்துவருகிறார்கள்.