நெட்டிசன்:

பாஜக பிரமுகர்  narayanan thirupathy  அவர்களின் முகநூல் பதிவு:

டெங்கு காய்ச்சல் – தீபாவளி.பட்டாசு

இந்தியாவில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு அறிவியல் ரீதியான காரணம் உண்டு. தீபாவளி என்பது அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வரும் பண்டிகை. இந்த மாதங்களில் மழை அதிகம் பெய்து வீடுகள் இருக்கும் பகுதிகளில் நீர் தேங்குவதால், இந்த காலத்தில் தான் கொசுக்கள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த கொசுக்களின் மூலமே மலேரியா, டெங்கு போன்ற பல்வேறு தொற்று நம்மில் குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயாதானவர்கள் போன்றறை தாக்குகிறது. இந்த கொடிய தொற்றை தவிர்ப்பதற்காக தான் தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிக்கும் பழக்கம் உருவானது. தீபாவளிக்கு ஒரு மாதம் முன்னதாகவே பட்டாசுகள் கடைகளுக்கு விற்பனைக்கு வந்ததன் உண்மை இது தான். எந்த ஒரு பழக்கத்தையும் நம்பிக்கைகளின் மூலமாக விதைப்பதின் மூலம் மட்டுமே சமுதாயத்தை கட்டமைக்க, சீரமைக்க முடிந்தது என்பது கண்கூடு.
தீபாவளி என்பது ஹிந்துக்கள் மட்டுமே கொண்டாடுகிறார்கள் என்ற வாதம் எழுமானால், அந்த வாதத்திற்கான ஒரே பதில், மற்ற மதங்கள் இந்தியாவில் குடி புகுந்த மதங்களே. 5000 வருடங்களுக்கு முன் நாம் அறிந்த மகாபாரதத்தில் மற்ற மாதங்கள் இருந்ததாக சான்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, தீபாவளியை, நம் பண்டிகைகளை விமர்சனம் செய்வது, பட்டாசு வெடிக்க கூடாது என்று சொல்வதெல்லாம் தவறான வாதங்கள் என்பதை நாம் உணர வேண்டும். மாசு ஏற்படுவது, கட்டிட குப்பைகள், கழிவுகள், அசுத்தங்கள், பிளாஸ்டிக் போன்ற அன்றாடம் நம்முடைய தவறுகளால் தான் என்பதை உணர்ந்து நம்மை செம்மைப்படுத்தி கொள்ளவேண்டியது அவசியம். இதில் மதத்தை புகுத்துவது சமுதாயத்திற்கு செய்யும் மிக பெரிய துரோகம். பட்டாசு வெடிப்பதை தடுப்பதால் மட்டுமே மாசை கட்டுப்படுத்திவிடலாம் என்பது மிக மோசமான நடவடிக்கை. அன்றாடம் நம் வசதிகளை பெருக்கிக்கொள்ள நாம் உபயோகப்படுத்தும் வாகனங்கள், நம் வாழ்க்கை முறையை மாற்றியமைத்து கொள்வதின் மூலம் மட்டுமே கொடிய தோற்று நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றி கொள்ள முடியும் என்பதை நாம் உணர வேண்டும்.

சிறிது காலம் முற்போக்குகள் மற்றும் போலி மதச்சார்பின்மையினர் தங்களின் மேதாவித்தனத்தை தவிர்த்து, நோயற்ற வாழ்வை மக்கள் பெற ஒத்துழைப்பார்களா? அதிக அளவில் பட்டாசை வெடித்து டெங்கு இல்லாத தீபாவளியை கொண்டாடுவோம். இதை முறையாக அரசுகள் உணர்ந்து செய்யப்படுமா? நாம் நம் முன்னோர்கள் கொண்டு வந்த பல்வேறு கட்டுப்பாடுகளை, செயல்திட்டங்களை உணர்வோமா? காலம் பதில் சொல்லும்.