சென்னை:

விதிகள் மீறி உத்தண்டி கடற்கரையில் பங்களா கட்டியுள்ள நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான நடிகர் கமலஹாசனுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ள்ளது.

சென்னை உத்தண்டி கடற்கரையில் தனக்கு பங்களாக கட்ட மாநகராட்சி அனுமதி வழங்கவில்லை என்றும், தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், ஏற்கனவே பலர் விதிகள் மீறி அந்த பகுதியில் கட்டிடம் கட்டியிருப்பதாகவும்  ரங்கநாதன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  விதிகளை மீறி உத்தண்டி கடற்கரையில் வீடுகள் கட்டியிருப்பதாக கமலஹாசன், நடிகை ரம்யா கிருஷ்ணன் 138 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, விதிகள் மீறி கடற்கரையில் கட்டிடம் கட்டியுள்ள நடிகர் கமல்ஹாசன், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்பட138 பேருக்கும்  நோட்டீஸ் அனுப்ப சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.