மும்பையைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள் கடற்கரையை ரசிக்க காலையில் தங்கள் ஃபெராரியுடன் கடற்கரைக்குச் செல்ல திட்டமிட்டனர்.
மகாராஷ்டிராவின் ராய்காட்டில் உள்ள ரெவ்தண்டா கடற்கரையில் அவர்கள் தங்களது ஃபெராரி கலிபோர்னியா மாடல் காரை மணலில் ஓட்டியபோது அது மணலில் சிக்கிக்கொண்டது.
கடற்கரையில் கூடியிருந்த கூட்டத்தின் உதவியுடன் அந்த காரை மணற்பரப்பில் இருந்து தள்ள முயற்சி செய்தும் அது நகரவில்லை.
ஃபெராரியை எந்த வகையிலும் மணலில் இருந்து வெளியே எடுக்க முடியாத நிலையில், மாட்டு வண்டியின் மூலம் அந்த காரை வெளியே இழுக்க அதன் உரிமையாளர் முடிவு செய்தார்.
இதையடுத்து உள்ளூர் மாட்டு வண்டி ஒன்று வரவழைக்கப்பட்டதை அடுத்து மாட்டு வண்டி ஓட்டுநர் ஃபெராரியை தனது மாட்டு வண்டியில் கயிற்றால் கட்டி மணலில் இருந்து எளிதாக வெளியே இழுத்தார்.
இந்த காட்சி கடற்கரையில் காற்று வாங்க வந்த மக்களை வியப்பில் ஆழ்த்திய அதே சமயம் மாட்டு வண்டி உதவியுடன் ஃபெராரி காரை மணற்பரப்பில் இருந்து வெளியே இழுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.