அகமதாபாத்:
மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்கும் திட்டம் செயல்படுத்தபடவுள்ளது.
‘‘இந்த திட்டத்திற்கு செலவிடப்படும் மற்றும் நிதி நிர்வாக அடிப்படையில் தினமும் 88 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பயணிகளை தினமும் கையாள வேண்டும். அல்லது நாள் ஒன்றுக்கு 100 முறை இந்த ரயிலை இயக்கினால் மட்டுமே போதுமான நிதியாதாரத்தை பெற முடியும்’’ என்று அகமதாபாத் ஐஐஎம் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்து.
மேலும், அந்த ஆய்வில், ‘‘300 கி,மீ பயணத்திற்கு டிக்கெட் கட்டணம் ஒரு நபருக்கு ஆயிரத்து 500 ரூபாய் என நிர்ணயம் செய்து, 88 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பயணிகளை தினமும் கையாண்டால் மட்டுமே 15 ஆண்டுகளில் இதற்கான கடன் தொகையை வட்டியுடன் திரும்ப செலுத்த முடியும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு 50 ஆண்டுகளில் திருப்பி செலுத்தும் வகையில் 97 ஆயிரத்து 636 கோடியை 0.1 சதவீத வட்டியில் ஜப்பான் கடனாக வழங்குகிறது. திட்டம் நிறைவேற்றப்பட்டு 16வது ஆண்டு முதல் இந்த 50 ஆண்டுகளின் எண்ணிக்கை தொடங்கவுள்ளது. ஜப்பானில் இந்த நிதி 80 சதவீதம் மட்டுமே. மிதமுள்ள 20 சதவீத தொகையான 20 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் ரயில்வே துறை வருவாய் ஈட்டவே 16 ஆண்டுகள் ஆகும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘‘இதன் மூலம் ரயில்வே 100 ரூபாய் வருவாய் ஈட்டினால் இதில் ரூ. 20 அல்லது ரூ. 40 பராமரிப்பு செலவு க்கு சென்றுவிடும். மீதமுள்ள தொகை மட்டுமே வட்டியுடன் கடன் தொகை அடைக்க உதவும். ஒரு முறை இந்த ரயிலில் 800 பேர் பயணித்தால், நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 88 ஆயிரம் பயணிகளை பயணிக்கச் செய்ய தினமும் இரு மார்கத்திலும் 100 முறை இந்த ரயில் இயக்கப்பட வேண்டும். அதனால் இரு மார்கத்திலும் ஒரு மணி நேரத்திற்கு 3 ரயில்கள் இயக்கப்பட வேண்டும்’’ என அந்த அறிக்கையில் தெரிவி க்கப்பட்டுள்ளது.