
1998ஆம் ஆண்டு வெளியான ‘ப்ரீட்சோசு டப்பா’ என்ற திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் புல்லட் பிரகாஷ்.
கடந்த 2015ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். கன்னட பிக்பாஸ் இரண்டாவது சீசனிலும் கலந்து கொண்டார்.
கடந்த சில நாட்களாகவே குடல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த புல்லட் பிரகாஷ் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணமடைந்தார்.
புல்லட் பிரகாஷ் மறைவுக்கு கன்னட திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel