டெல்லியில் 2 மாடிக் கட்டிடம்  இடிந்து விழுந்தது;  இடிபாடுகளில் சிக்கிய ஒருவரை மீட்கும் பணி தீவிரம்  

Must read

புதுடெல்லி: 
டெல்லியில் 2 மாடிக் கட்டிடத்தின்  இடிந்து விழுந்த சம்பவத்தில்  இடிபாடுகளில் சிக்கிய ஒருவரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியின் நந்த் நாக்ரியில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இடிந்து விழுந்த கட்டிடம் தனி ராம் என்பவருக்குச் சொந்தமானது. இந்தச் சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கிய  தனி ராம் மற்றும் அவரது மனைவி அனாரோ தேவி மற்றும் ஒருவர் என  மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர்.  இவர்களுடன் மேலும் ஒரு நபர் கட்டிடத்திலிருந்துள்ளது தெரிய வந்துள்ளது. அவர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுவதால், அவரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

More articles

Latest article