மாதிரி புகைப்படம்

மும்பை

ரு கட்டுமான நிறுவனம் 38 மாடிக்கு அனுமதி பெற்று 39 ஆம் மாடியில் கட்ட உள்ள வீட்டை விற்பனை செய்துள்ளது.

மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஸ்கைலைன் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம்.   இந்த நிறுவனம் வீடுகளைக் கட்டி விற்பனை செய்து வருகிறது.   அவ்வகையில் அலாவுதின் ஜுனத் ஷேக் என்பவர் 39 ஆம் மாடியில் அமைக்கப்பட உள்ள குடியிருப்பை இந்த நிறுவனத்திடம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார்.    அதற்கான முன்பணமும் இந்த நிறுவனம் பெற்றுள்ளது.

அரசு இந்த நிறுவனத்துக்கு 38 மாடிகள் மட்டுமே கட்ட அனுமதி கொடுத்திருந்த நிலையில் நிறுவனம் 39 ஆவது மாடியில் கட்ட உள்ள குடியிருப்பை விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்டு பணமும் பெற்றுள்ளது.    பிறகு கட்டிடத்தின் உயரத்தை அதிகரிக்க அரசிடம் நிறுவனம் மனு செய்துள்ளது.    ஆனால் சிவில் விமான அமைச்சகத்தின் சட்டப்படி 39 ஆவது மாடி கட்ட தடையில்லா சான்றிதழ் கிடைக்காததால் கட்டிடத்தின் உயரத்தை அதிகரிக்க அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனுமதி மறுத்து விட்டது.

குடியிருப்பை வாங்கிய அலாவுதீன் மகாராஷ்டிரா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.  இதை விசாரித்த ஆணையம், “கடந்த 2013-14 கணக்கு ஆண்டில் அலாவுதினிடம் இருந்து நிறுவனம் பணம் வாங்கி உள்ளது.  ஆனால் இன்று வரை கட்டிடம் கட்டி முடிக்கப்படவில்லை.   மேலும் அனுமதி மறுக்கப்பட்டதால் இனி கட்டிடம் கட்ட வாய்ப்பும் இல்லை.   எனவே நிறுவனம் அவரிடம் இருந்து வாங்கிய பணத்தை இழப்பிட்டுடன் 2015ஆம் வருடமே திருப்பி தந்திருக்க வேண்டும்.

இதனால் இந்த ஆணையம் ஸ்க்லைலைன் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்துக்கு இந்தப் பணத்தை உடனடியாக 10.5% வட்டியுடன் அலாவுதினுக்கு திருப்பி அளிக்க உத்தரவிடுகிறது.   மேலும் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரு.1 லட்சம் இழப்பீடும்,  வழக்கு செலவுகளுக்காக ரூ. 25000ம் கூடுதலாக உடனடியாக வழங்கப்படவேண்டும்”  என தீர்ப்பளித்துள்ளது.