2019-20-ம் நிதி ஆண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.


சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ 1 கோடி வரை கடன் வழங்கப்படும் 

ஆண்டுக்கு ரூ1.5 கோடிக்கும் குறைவாக வணிகம் செய்யும் வணிகர்களுக்கு பென்சன்.

கார்ப்பரேட் கடன் சந்தை சீரமைப்புக்கு கண்காணிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்படும்

தன்னார்வ நிறுவனங்களை செபியின் கீழ் பட்டியலிட நடவடிக்கை எடுக்கப்படும்

தன்னார்வ நிறுவனங்கள் நிதி ஆதாரங்களை திரட்டுவது வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும்

இலவச சமையல் எரிவாயு திட்டம், சவுபாக்யா திட்டங்கள் மக்களின் வாழ்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளன

நிர்மலா சீதாராமன் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 9.9 கோடி வீடுகள் கட்டப்படும்

கடந்த 5 ஆண்டுகளில் 7 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச இலவச மையல் எரி வாயு

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி முழுமையாக செயல்படுத்தப்படும்