டெல்லி: 2024ம் ஆண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்  இன்று குடியரசு தலைவர் உரையுடன்  தொடங்கியது.  முன்னதாக பாராளுமன்றம் வந்த குடியரசு தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் இரு அவைகளின் கூட்டு அமர்வில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றினார்.

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு  இன்றுதான் முதல்முறையாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை தந்தார். அவரை, ராணியைப் போல சாரட் வண்டியில்  அதிகாரிகள் அழைத்து வந்தனர். பின்னர் நாடாளுமன்றம் வருகை தந்த குடியரசு தலைவரை, செங்கோலை ஏந்தியபடி வரவேற்றனர். இருஅவைகளின் தலைவர்கள், பிரதமர் மோடி உள்பட மூத்த அமைச்சர்கள் அழைத்து வந்தனர்.

நடப்பு மக்களவையின் பதவிக் காலம் ஜூன் மாதம் நிறைவடையவுள்ளது.  தற்போதுள்ள, 17-ஆவது மக்களவையின் கடைசி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இதுவாகும். இந்த நிலையில், இன்று நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடா் மற்றும் பட்ஜெட் கூட்டத் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது.   இந்த கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இடைக்கால பட்ஜெட்டை நாளை (பிப்ரவரி 1ந்தேதி) தாக்கல் செய்கிறார்.

முன்னதாக, இன்று நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் முதல் நாளில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு,   இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றி வருகிறார்.  இந்த அவையில் எனது முதல் உரை இதுவாகும். சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவை வளர்ச்சியடைந்த பாரதம் நிர்ணயம் செய்யும் என திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

“கடந்த 10 வருட நடைமுறைகளின் நீட்சிதான் இன்று நாம் காணும் சாதனைகள். சிறுவயதில் இருந்தே ‘கரீபி ஹடாவோ’ என்ற முழக்கத்தைக் கேட்டோம். இன்று, நம் வாழ்வில் முதன்முறையாக, பெரிய அளவில் வறுமை ஒழிக்கப்படுவதைக் காண்கிறோம் என்றார்.

வரும் ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெறும் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் பிப். 9-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நாளை(பிப்.1) இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கிறாா்.

மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, 2024-25-ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். தோ்தல் நடைபெறுவதால், குடியரசுத் தலைவா் உரையும் இடைக்கால பட்ஜெட்டும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

தேர்தல் வெற்றிக்கு பிறகு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வோம் என பிரதமர்  மோடி கூறிய நிலையில்,   இந்த கூட்டத் தொடரில், வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயா்வு, விவசாயிகளின் பிரச்னை, மணிப்பூா் நிலவரம், மதுரை எய்ம்ஸ், தமிழக ஆளுநரின் செயல்பாடு உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் முன்வைக்க திட்டமிட்டுள்ளனர்.