சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில், காலை 11 மணியளவில், தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக பட்ஜெட், சட்டமன்ற கூட்டத்தொடர் மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்துவிவாதிக்கபட்டாக கூறப்படுகிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பதவி ஏற்றதைத்தொடர்ந்து, 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 21-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கப்பட்டது. பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், ஜூன் 24-ம் தேதியுடன் சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைத்தார்.
இதையடுத்து, 2021 – 22 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியது உள்ளது. இதன் காரணமாக, வரும் 13ஆம் தேதி முதல் மீண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று முற்பகல் நடைபெற்றது.
இன்று சென்னை தலைமை செயலகத்தில், காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முதல் முறையாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. அது தொடர்பாகவும், ஏற்கனவே விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அது தொடர்பாகவும், நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல், கொரோனா நிலவரம், தமிழகத்தின் தற்போதைய நிதி நிலை உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உள்ளது.