சென்னை:

மிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில்  நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.

தமிழக அமைச்சரவையின்  முதல் கூட்டம்  கடந்த ஜனவரி மாதம் 20-ந் தேதி நடைபெற்றது. அதையடுத்து,  2-வது கூட்டம் இன்று காலை 11 மணி அளவில்  சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் துறை சார்ந்த செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில், 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் குறித்தும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தும்,  நடத்தப்பட வேண்டிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.