புதுடெல்லி: இந்த 2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், விளையாட்டுத் துறைக்கான நிதி, ரூ.230 கோடியளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், விளையாட்டுத் துறைக்கென்று மொத்தமாக ரூ.2596.14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட்டைவிட ரூ.230.78 கோடி குறைவாகும். அதாவது 8.16% குறைவு.
இந்த மொத்த தொகையில், இந்திய விளையாட்டு ஆணையத்திற்கென்று ரூ.660.41 கோடி தரப்படவுள்ளது. இது கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட ரூ.500 கோடியைவிட அதிகம். கேலோ இந்தியா விளையாட்டிற்கு, கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட ரூ.890.42 கோடியிலிருந்து, இந்தாண்டு ரூ.657.71 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், தேசிய விளையாட்டு அமைப்புகளுக்கான நிதி, கடந்தாண்டைவிட ரூ.35 கோடி அதிகரிக்கப்பட்டு ரூ.280 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.