சென்னை: பொதுவிநியோகத்திட்டத்தில் உணவு மானியத்திற்காக ரூ.10,500 கோடி ஒதுக்கீடு செய்து நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார். இணைத்த பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

 அவர் தனது பட்ஜெட் உரையில்,

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றும், இது செப்டம்பர் 15ந்தேதி அண்ணா பிறந்தநாளான்று வழங்கப்படும் என்றும், உரியவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.இதற்காக ரூ.7ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே நேரடி மானியமாக அதிக நிதி வழங்கும் திட்டமாக மகளிர் உரிமை தொகை திட்டம் இருக்கும் என்றும், குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று தெரிவித்தார். மேலும், சமையல் கியாஸ் மானியம் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும்  என்று பட்ஜெட் உரையில்  நிதுயமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

சமையல் கியாஸ் மானியம் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக 1 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். அதன்படி, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு கூடுதலாக 1 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.5,346 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் 35.8 லட்சம் பயனாளிகள் ஓய்வூதியம் பெறுவார்கள்.

பத்திரப்பதிவு கட்டணம் ரூ.4 சதவிகிதத்தில் இரந்து இரண்டு சதவிகிதமாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நிலம் வாங்குபவர்களின் சுமையை குறைக்க பத்திரப்பதிவு கட்டணம் குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

சேலத்தில் 119 ஏக்கரில் ரூ.850 கோடி செலவில் ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும்.

ரூ.20 கோடி செலவில் 10 சிறிய கைத்தறி பூங்காக்கள் உருவாக்கப்படும் எனவும்,

விருதுநகரில் ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா மத்திய, மாநில அரசுகள் நிதி பங்களிப்புடன் அமைக்கப்படும் எ

ரேஷன் கடைகளில் உணவு பொருட்களுக்கான மானியம் வழங்க ரூ.10,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு ரூ.16,262 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாய கடன் தள்ளுபடிக்கு ரூ.2,393 கோடியும், நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

மேலும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.30,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும், பெண் தொழில் முனைவோர், புதிய தொழில்களை தொடங்குவதற்கு வழிவகை செய்யும் வகையில் புதிய இயக்கம் ஒன்று அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளர்.