டெல்லி: இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் பொதுபட்ஜெட்டை  தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், சுமார் 1மணி 50 நிமிடம் பட்ஜெட் உரையை வாசித்தார்.

முன்னெப்போதும் இல்லாத சூழலில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதாக கூறியவர், பொதுமுடக்கத்தால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது  என்றவர், கோவிட் பலவீனமான வருவாய் வரத்துக்கு வழிவகுத்தது என்றார்.

2021-2022 பட்ஜெட் ரூ .33.83 லட்சம் கோடி என்று கூறியவர்,   மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 9.5 சதவீதமாகும் என்றார்.

மேலும்,  2025-26 க்குள் சிறந்த 4.5 நிதி பற்றாக்குறையை எட்டுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

நிர்மலா சீத்தாராமனின்  இன்றைய பட்ஜெட் உரை காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில், சரியாக 12,50 மணிக்கு நிறைவடைந்தது.  சுமார் 1 மணி நேரம் 50 நிமிடம் அவர் பட்ஜெட் உரையை வாசித்துள்ளார்.