சென்னை:

மிழக சட்டமன்ற பேரவையில் பட்ஜெட் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இதைத் தொடர்ந்து துணைமுதல்வர் ஓபிஎஸ், சரியாக 10 மணி அளவில் பட்ஜெட் வாசிக்கத் தொடங்கினார்.

முன்னதாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தரிசனம் செய்தார். அதையடுத்து தலைமைச்செயலகம் வந்த ஓபிஎஸ், முதல்வர் எடப்பாடியுடன் சட்டசபைக்கு வந்தார்.

முதலில் எப்போதும்போல, ஜெயலலிதாவையும், எம்ஜிஆரையும் வானளாவ புகழ்ந்துவிட்டு, பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார்.

உலக பொருளாதார சூழலில் வீசும் எதிர்காற்றை தமிழகமும் எதிர்கொண்டு வருகிறது.தொடர்ச்சியாக பெறப்படும் முதலீடுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்றும்,  பொருளாதார நெருக்கடிகளை தமிழகம் திறமையாக சமாளித்துள்ளது என்று கூறினார்.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதமான 7.27%, கணிக்கப்பட்ட தேசிய பொருளாதார வளர்ச்சி விகிதத்தைவிட அதிகம் என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கான பங்கு சிறிதளவு அதிகரித்துள்ளது, இதில் தமிழகத்தின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும் என்றார்.

சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் பற்றாக்குறை

2021-2022 நிதி ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.10,970 கோடியாக குறையும்

தமிழக அரசின் நிலுவைக் கடன் ரூ.4,56,660 கோடி

சுகாதாரத்துறைக்கு ரூ.15 ஆயிரத்து 863 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தின் உற்பத்தி மதிப்பில் நிலுவைக்கடன் 21.83 சதவீதம்

தமிழக அரசின் வருவாய் ரூ.2.19 லட்சம் கோடி

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு