சென்னை:
தமிழக 2020-21ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக துணைமுதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறது.
‘தமிழக அரசின் நிலுவைக் கடன் ரூ.4,56,660 கோடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு துறைகளுக்கு கோடிக்கணக்கில் நிதிஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி துறைவாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் விவரம்….
சுகாதாரத்துறைக்கு ரூ.15 ஆயிரத்து 863 கோடி ஒதுக்கீடு
மின்சாரத்துறைக்கு ரூ.20,115 கோடி ஒதுக்கீடு
கல்வித்துறைக்கு 34,841 கோடி ரூபாய் ஒதுக்கீடு
உணவு மானியத்திற்கு ரூ.6500 கோடி ஒதுக்கீடு
11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி கடலூர் மாவட்டத்திற்கான மருத்துவக் கல்லூரி
தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74.08 கோடி ஒதுக்கீடு
மாநிலங்களுக்கு இடையிலான நிதிப்பகிர்வில் தமிழகத்தின் பங்கு 4.789 சதவீதமாக உயர்வு
கீழடியில் அகழ்வைப்பகம் அமைக்க ரூ.12.21 கோடி ஒதுக்கீடு
போக்குவரத்து துறைக்கு ரூ.2716.26 கோடி ஒதுக்கீடு
சென்னை பெங்களூர் தொழில்வடத்திட்டத்தின் கீழ் பொன்னேரியில் 21,966 ஏக்கரில் தொழில் முனைய மேம்பாட்டு திட்டம்
சென்னை – கன்னியாகுமரி இடையே பொருளாதார பெருவழிச்சாலை திட்டம்
நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.15850 கோடி ஒதுக்கீடு
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.4315 கோடி ஒதுக்கீடு
பேரிடம் மேலாண்மைக்கு ரூ.1360 கோடி ஒதுக்கீடு
பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி ஒதுக்கீடு
தமிழக காவல்துறைக்கு ரூ.8876 கோடி ஒதுக்கீடு
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு
அம்மா உணவக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.100 கோடி
சிறைச்சாலைகள் துறைக்கு ரூ.392 கோடி ஒதுக்கீடு
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு ரூ.18540 கோடி ஒதுக்கீடு
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு ரூ.18540 கோடி ஒதுக்கீடு
நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.1403 கோடி ஒதுக்கீடு
திறன்மிகு நகரங்கள் திட்டங்களை செயல்படுத்த ரூ.1650 கோடி ஒதுக்கீடு
வேளாண்துறைக்கு ரூ.11894 கோடி ஒதுக்கீடு
அம்ருத் திட்டத்தை செயல்படுத்த ரூ.1450 கோடி ஒதுக்கீடு
வரும் நிதி ஆண்டில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் ரூ.11 ஆயிரம் கோடி பயிர்க்கடன்
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5306.95 கோடி ஒதுக்கீடு
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.6754.30 கோடி ஒதுக்கீடு
கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு
வருவாய் பற்றாக்குறை மாநியமாக ரூ.4025 கோடி வழங்க 15வது நிதிக்குழு பரிந்துரை
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
1,12,876 தனி வீடுகள், 65,290 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்
ரூ.504 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள தமிழ்நாடு
5 புதிய மாவட்டங்களில் ரூ.550 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகம் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்படும்
குடிமராமத்து திட்டத்துக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் மேலும் 6 பெட்ரோல் நிலையங்கள்
அரசுப் பேருந்துகளில் மின்னணு பணப் பரிமாற்ற முறையில் பயணச்சீட்டு வழங்க நடவடிக்கை
ஒரேநாடு ஒரே ரேஷன் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்
நீதி நிர்வாகத்திற்க ரூ.1,403.17 கோடி நிதி
பேரிடர் மேலாண்மைத்துறைக்கு ரூ.1,360.11 கோடி ஒதுக்கீடு
விபத்தில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் இழப்பீடு’
புதிய அருங்காட்சியகத்திற்கு நிதி ஒதுக்கீடு’
கீழடியில் கிடைத்த பொருள்களை வைக்கும் அருங்காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு
மாமல்லபுரத்தை மேம்படுத்த ரூ.463 கோடியில் சிறப்புத் திட்டம்
சிறப்பு பொது விநியோக திட்டத்தில் 2020-21ம் ஆண்டிலும் துவரம்பருப்பு, சமையல் எண்ணெய் தரப்படும்
அல் கெப்லா குழுமத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு வளாகம் ரூ.49,000 கோடியில் அமைக்கப்படும்
மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால உதவி, சேமிப்பு திட்ட சிறப்பு உதவித்தொகைக்காக ரூ.298.12 கோடி
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கல்வி வசதிக்காக ரூ.302.98 கோடி
தமிழக காவல்துறைக்கு ரூ.8,876.57 கோடி ஒதுக்கீடு
விழுப்புரம் அழகன்குப்பம், செங்கல்பட்டு ஆலம்பரைக் குப்பத்தில் மீன்பிடித்துறைமுகம் அமைக்க ரூ.235 கோடி
குடிமராமத்து திட்டத்திற்கு ரூ.300 கோடி
11ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணிணி வழங்குவது தொடரும். இலவச மடிக்கணிணி வழங்க ரூ.966.46 கோடி ஒதுக்கப்படும்
கோவை அரசு பொறியியல் கல்லூரிக்கு ரூ.10 கோடி மானியம்
மெட்ரோ ரயில் கடனை அடைக்க ரூ.300 கோடி
சென்னையில் வீடுகளில் மின்சாரம் அளவிட ஸ்மார்ட் மீட்டர்கள்
7,233 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு கோயில்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.375 கோடி
1,500 கிலோ மீ. சாலைகளை மேம்படுத்த 1,050 கோடி நிதி ஒதுக்கப்படும்
செங்கல்பட்டு மாவட்டம் சிட்லப்பாக்கம் ஏரியை மீட்டெடுக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படும்
ராமநாதபுரம் மற்றும் விழுப்புரத்தில் ரூ.3,041 கோடி ரூபாய் செலவில் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்.