சென்னை:
தமிழக 2020-21ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக துணைமுதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வத்தால், தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
‘தமிழக அரசின் நிலுவைக் கடன் ரூ.4,56,660 கோடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு துறைகளுக்கு கோடிக்கணக்கில் நிதிஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற தமிழக அரசு திட்டம் வகுக்கப்பட்டு வருவதாகவும் கூறி உள்ளது.
எடப்பாடி அரசின் நிர்வாகக் கோளாறுகளால் வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 23,500 கோடியாக உயர்வு! திமுக எம்எல்ஏ பிடிஆர் குற்றச்சாட்டு