க்னோ

டுத்த வருடம் நடைபெற உள்ள உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என மாயாவதி அறிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதுவரை 4 முறை முதல்வர் பதவி வகித்துள்ளார்.   2019 ஆம் வருடம் மக்களவை தேர்தலில் அவருடைய கட்சி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடனும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடனும் கூட்டணி அமைத்தது.  மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் 10 தொகுதிகளிலும் சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளில் மட்டுமே வென்றது.

அவருடைய கட்சி சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலி தள கட்சியுடன் கூட்டணி அமைத்தது.  இந்நிலையில் உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளது.   இந்த தேர்தல்களில்  ஓவைசியின் ஏ ஐ எம் ஐ எம் கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இதையொட்டி மாயாவதி தனது டிவிட்டரில், “ஒரு செய்தி தொலைக்காட்சியில் நடைபெற உள்ள உ பி மற்றும் உத்தரகாண்ட்  மாநில சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும் ஓவைசியின் ஏ ஐ எம் ஐ எம் கட்சியும் கூட்டணி வைக்க உள்ளதாகக் கூறி உள்ளது. இந்த செய்தி முழுவதும் தவறானது.  இந்த செய்தி உண்மையைத் தவறான பாதையில் எடுத்துச் செல்கிறது.   இதில் சிறிதளவும் உண்மை இல்லை.  இதை எங்கள் கட்சி மறுக்கிறது.

எங்கள் கட்சி பஞ்சாப் மாநிலத்தைத் தவிர உபி மற்றும் உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தனியாகவே போட்டியிட உள்ளது.  எங்கள் கட்சி எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணியில் இல்லை.   எங்கள் கட்சி எந்த ஒரு செய்தி வெளியிடுவதாக இருந்தாலும் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சதீஷ் சந்திர மிஸ்ராவிடம் கேட்டறிந்த பிறகு வெளியிடுமாறு நான் ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்”  என இந்தியில் தெரிவித்துள்ளார்.