லக்னோ:

னிமேல் நடைபெற உள்ள  தேர்தல்களில்   கூட்டணியின்றி பகுஜன் சமாஜ் கட்சி தனியாக போட்டியிடும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பகிரங்கமாக தெரிவித்து உள்ளார்.

லோக்சபா தேர்தலின்போது உ.பி. மாநிலத்தில் பிஎஸ்பி, எஸ்.பி. கட்சிகளுக்கு இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. பல ஆண்டுகளாக எலியும், பூனையுமாக இருந்து வந்த இரு கட்சிகளும், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக  தேர்தல்  கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால், பிஎஸ்பி, சமாஜ்வாதி கூட்டணி 15 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், பாஜக 62 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து பிஎஸ்பி, எஸ்பி கட்சிகளுக்கு இடையே தோல்வி குறித்து கருத்து மோதல் நிலவி வந்தது. இந்த நிலையில், சமீபத்தில் பிஎஸ்பி தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய மாயாவதி, சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் பகுஜன் சமாஜ் கட்சிக்காக தேர்தல் பணியாற்றவில்லை என்றும், வாக்குகளை செலுத்த வில்லை என்றும் வெளிப்படையாக விமர்சித்தார்.

இந்த நிலையில், எதிர்காலத்தில் நடைபெறும்   அனைத்து தேர்தல்களிலும் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி இல்லாமல் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என மாயாவதி தெரிவித்து உள்ளார்.

மக்களவை தேர்தலுக்கு பிந்தைய சமாஜ்வாதி கட்சியின் செயற்பாடுகளே தனித்து போட்டியிடும் முடிவுக்கு காரணம் என மாயாவதி தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.  அதில், பகுஜன் சமாஜ் கட்சி ‘கூட்டணி தர்மத்தை’ முழுமையாகக் கடைப்பிடித்தது, கடந்த காலங்களில் இரு கட்சிகளும் கொண்டிருந்த வேறுபாடுகளைத் தாண்டி எஸ்.பி. “பகுஜன் சமாஜ் கட்சி எஸ்பியுடனான வேறுபாடுகளுக்கு அப்பால் நகர்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே, மேலும் எஸ்பி அரசாங்கம் 2012-17ல் எடுத்த தலித் எதிர்ப்பு முடிவுகளுக்கும் கூட்டணி தர்மத்தை நிறைவேற்ற அவர்களின் ஆட்சியில் மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைக்கும் அப்பாற்பட்டது” என்று கூறி உள்ளார்.

நேற்று நடைபெற்ற கட்சி கட்சியின் தேசிய நிர்வாகக் கூட்டத்தில், பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி சமாஜ்வாதி கட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறினார்.

பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு சமாஜ்வாடி கட்சியின் நடத்தையை பார்க்கும்போது, இனிமேல்  பாஜகவை தோற்கடிக்க அந்த கட்சியால்  முடியுமா என்பது கேள்விக்குறியானது என்றும், இதன் காரணமாக அவர்களுடனான கூட்டணி குறித்து  மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

லோக்சபா தேர்தல் கூட்டணியின்போது, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களில்  முஸ்லிம்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டாம் என்று தன்னிடம் அகிலேஷ் யாதவ் கேட்டுக் கொண்ட தாகவும், ஆனால் அவர் பேச்சை நான் கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்த போது, யாதவர் அல்லாத மற்றும் தலித் மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டன. அதனால்தான் அவர்கள் யாரும் சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிக்கவில்லை. அவ்வளவு ஏன், தலித் மக்களின் மேம்பாட்டுக்கு எதிராக சமாஜ்வாதி கட்சி போராட்டங்களைக் கூட நடத்தின என்று மூடிய அறைக்குள் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசியுள்ளார் மாயாவதி. மேலும், முலாயம் சிங் யாதவ் பாஜகவுடன் கூட்டணி அமைத்து வேலை செய்வதாகவும் மாயாவதி குற்றம்சாட்டினார்.

அவரது மோசமான ஆலோசனையே கூட்டணி கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்றும் குற்றம் சாட்டினார். அதைத்தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி இனி வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிடும் என்று அறிவித்துஉள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் சமாஜ்வாதி கட்சியின்செயல்பாடுகளால் இனி அக்கட்சியால் பாஜக-வை எதிர்த்து போராட இயலாது என்பதை அறிந்து இந்த முடிவை எடுக்க நேர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.