க்னோ

த்திர பிரதேச கோரக்பூர் மற்றும் புல்பூர் இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மத்திய பிரதேஷ்,  ராஜஸ்தான் தேர்தல்களில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடந்து முடிந்த உத்திரபிரதேச மக்களவை இடைத்தேர்தல் வெற்றிக்குப் பின் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி அடுத்தடுத்த வெற்றிகளை எதிர் பார்த்து வருகிறது.   வரப்போகும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக மாயாவதி கட்சிக் கூட்டம் ஒன்றை நேற்று நடத்தினார்.   லக்னோவில் நடைபெற்ற  இந்தக் கூட்டத்தில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் தலைவர்கல் உட்பட பல மூத்த தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வரப்போகும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்கள் குறித்தும், 2019ஆம் வருடம் நடைபெற உள்ள மக்களவை தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.    கூட்டத்தில் பேசிய மாயாவதி, “காங்கிரஸுக்காக எங்கள் கட்சி என்றுமே கதவைத் திறந்து வைத்துள்ளது.   முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்தே இரு கட்சிகளிடையே ஒற்றுமை இருந்து வருகிறது.   காங்கிரஸ் தலைமை எங்களுக்கு பல விதத்தில் உதவி உள்ளது.

சமாஜ்வாதி கட்சியுடனான உறவு வரும் தேர்தல்களிலும் நிச்சயம் தொடரும்     அனைத்தும் சரியாக அமையுமானால்  சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் இணந்து பாஜகவை தோற்கடிக்கும்.    ஆகையால் இரு கட்சிகளும் இணைந்து 2019ல் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தங்களின் கடின உழைப்பால் பாஜகவை வெல்லும்”  என தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் சென்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 6.29% வாக்குகளைப் பெற்றது.   காங்கிரஸுக்கு 36.38% வாக்குகளும் பாஜகவுக்கு 44.88% வாக்குகளும் கிடைத்தது.    எனவே தற்போதுள்ள நிலையில் பகுஜன் சமாஜ் உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால் அது மத்திய பிரதேச ஆளும் கட்சியான பாஜகவுக்கு சவாலாக அமையும்.