குருகிராம்: ரூ.125 கோடி காண்டிராக்ட் மோசடி செய்தது தொடர்பாக எல்லை பாதுகாப்பு படை முன்னாள் அதிகாரி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர் அரியானா மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி என கூறி மோசடி செய்துவந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில் பா.ஜ. கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வuக பாஜகவைச் சேர்ந்த மனோகர் லால் கட்டார் இருந்து வருகிறார். இங்குள்ள குருகிராம் மாவட்டம் மானேசரில் உள்ள என்.எஸ்.ஜி. எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை தலைமையகத்தில் பி.எஸ்.எப். எனப்படும் எல்லை பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் அதிகாரியாக பணியாற்றியவர் பிரவீன் யாதவ்.
இவர் தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்று கூறி மோசடி செய்து வந்துள்ளார். தேசிய பாதுகாப்பு படை வளாகத்தில் கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தங்களை பெற்றுத்தருவதாக கூறி 125 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்துள்ளார். இது தொடர்பான புகாரில், பிரவீன் யாதவை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் போலி ஐபிஎஸ் அதிகாரியான எல்லை பாதுகாப்பு படை அதிகாரி பிரவீன், தனியார் வங்கியில் என்.எஸ்.ஜி.பெயரில் போலி கணக்கு தொடங்கி, மோசடியாபக பெறப்பட்ட தொகையை அதில் முதலீடு செய்துள்ளார். இந்த மோசடி தொடர்பாக, பிரவீன் யாதவ் அவரது மனைவி மம்தா சகோதரி ரிது யாதவ் மோசடிக்கு உதவிய மற்றொருவர் என நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரவீன் யாதவ் வீட்டில் சோதனை நடத்தி 14 கோடி ரூபாய் ரொக்கம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் பி.எம்.டபிள்யூ. மற்றும் மெர்சிடிஸ் உட்பட ஏழு சொகுசு கார்களை பறிமுதல் செய்துள்ளப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.