லண்டன்: கொரோனா பரவல் நெருக்கடிகளைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், தனது ஊழியர்கள் 12,000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, தேவைக்கதிகமான ஊழியர்கள் விஷயத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2020ம் ஆண்டின் காலாண்டில் 13% வருவாய் இழப்பு ஏற்பட்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊழியர்களுக்கான வருமானத்தை ஈடுசெய்ய, தாங்கள் தொடர்ந்து மக்களின் வரிப்பணத்தை நம்பிக் கொண்டிருக்க முடியாது என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன முதன்மை நிர்வாக அதிகாரி அலெக்ஸ் குரூஸ் கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பிலிருந்து வரும் நாட்களில் மீண்டாலும், சூழல் மறுபடியும் சகஜ நிலைக்குத் திரும்புவதற்கு, பல ஆண்டுகள் ஆகலாம் எனவும்; எனவே, தனது டிரேட் யூனியன்களுக்கு, தேவைக்கு அதிகமாக உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்வது குறித்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் சார்பில் முறைப்படியான அறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.