ண்டன்

பிரிட்டனில் வயது முதிர்ந்தோருக்கு 3 ஆம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா தாக்குதலில் பிரிட்டன் 7 ஆம் இடத்தில் உள்ளது.  இங்கு இதுவரை 48 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு அதில் 1.28 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். கடந்த சில தினங்களாக இங்கு உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மேலும் அங்குக் குளிர்காலம் தொடங்க உள்ளது.  குளிர் காலத்தில் கொரோனா பரவல் பொதுவாக அதிகரிப்பதால் பிரிட்டன் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  பிரிட்டனில் பல முதியோர்கள் ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

எனவே அவர்களுக்கு கொரோனா பூஸ்டர் ஷாட்ஸ் என அழைக்கப்படும் 3 ஆம் டோஸ் தடுப்பூசி போட பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.  இதில் முதல் கட்டமாக 70 வயதைத் தாண்டியவர்களுக்கும் நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கும் மூன்றாம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.