ண்டன்

மிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது டெல்டாவை விட குறைவாக இருக்கும் எனத் தெரிய வந்துள்ளது.

தென் ஆப்ரிக்காவில் கொரோனா வைரசின் உருமாறிய திரிபான ஒமிக்ரான் பரவல் கண்டறியப்பட்டு தற்போது பல உலக நாடுகளில் பரவி உள்ளது.   ஒரு சில நாடுகளில் இதனால் கொரோனா அடுத்த அலை ஏற்பட்டுப் பாதிப்புக்கள் அதிகரித்து வருகின்றன.  எனவே உலகெங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் தென் ஆப்ரிக்க நாட்டின் தொற்று நோய்கள் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓமிக்ரான் வைரசால் பாதிக்கப்படும் தென் ஆப்பிரிக்கர்களில் 80% பேருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படாது. ஆயினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழலுக்கு வரும் நோயாளிகளுக்கு மற்ற திரிபுகளால் ஏற்படும் ஆபத்திற்கு இணையான ஆபத்தும், அச்சுறுத்தலும் இருக்கும்.” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரிட்டன் சுகாதாரத் துறை சில தரவுகளை வெளியிட்டுள்ளது.  அந்த தரவுகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட வேண்டிய தேவை உள்ளோர் டெல்டா வகை பாதிப்பை விட 50% முதல் 70% குறைவாக இருக்கும் எனத் தெரிய வந்துள்ளது.  இது மக்களுக்குச் சற்றே நிம்மதி அளித்துள்ளது.