லண்டன்:  ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா, இல்லையா என்பதை முடிவுசெய்யும் பொது வாக்கெடுப்பு பிரிட்டனில் இன்று நடக்கிறது.
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், தமது நாடு தொடர்ந்து ஒன்றியத்தில் இடம்பெறவேண்டும் என்று  பிரச்சாரம் செய்து வருகிறார்.
download
வாக்கெடுப்பின் முடிவு, அதற்கு மாறாக இருந்தால், கடுமையான விளைவுகளை நாடு சந்திக்கவேண்டியிருக்கும என அவர் பிரிட்டிஷ் மக்களை எச்சரித்துள்ளார்.
“விலகும் முடிவை பிரிட்டன் எடுத்தால் அது இந்தியாவையும் பாதிக்கும்.  பிரிட்டனில் முதலீடு செய்துள்ள இந்தியத் தொழிலதிபர்களின் தொழில்கள் பாதிப்படையும்,. இதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் பாதிக்கப்படும்” என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
மேலும், “விலகும் முடிவை பிரிட்டன் எடுத்தால் அந் நாட்டு  நாணயமான பவுண்டு மதிப்பு குறையும்  அதனால் பிரிட்டன் உடனான இந்தியம் ஏற்றுமதி இறக்குமதிக்கும் பாதிப்பு இருக்கும்”  என்றும் கூறப்படுகிறது.