பிரிஸ்பேன்: சிட்னி டெஸ்ட்டில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலிய துவக்க வீரர் வில் புகோவ்ஸ்கி, காயம் காரணமாக பிரிஸ்பேன் டெஸ்ட்டிலிருந்து விலகியுள்ளார்.
ஜோ பர்ன்ஸ் இடத்தில் களமிறங்கிய வில் புகோவ்ஸ்கி, முதல் இன்னிங்ஸில் 62 ரன்களை அடித்தார். அதேசமயம், இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன்களுக்கு அவுட்டானார்.
இந்நிலையில், பீல்டிங் செய்யும்போது இவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயம் குணமாகாத நிலையில், பிரிஸ்பேன் டெஸ்ட்டிலிருந்து விலகுகிறார் புகோவ்ஸ்கி. இவருக்கு பதிலாக மார்கஸ் ஹாரிஸ் களம் காண்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி விபரம்:
டிம் பெய்ன்(கேப்டன்), டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், மாத்யூ வேட், கேமரூன் க்ரீன், பாட் கம்மின்ஸ், மிட்ஷெல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்