சென்னை: 
மிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மேலும் 10-ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. எனினும் பள்ளிகள் திறக்கப்பட்டால் அதற்காக செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர் குழு,  15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் வகுப்பறைகளை பயன்படுத்த வேண்டும் என தமிழக வல்லுநர் குழுவிடம் பரிந்துரைத்துள்ளனர்.
மேலும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் குழுவினரும்,  தமிழக வள்ளுனர் குழுவிடம் இணைய வழி கல்வியை ஊக்குவிக்க கூடாது.. இது மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மாநில தணிக்கையாளர் அருளானந்தம் – பெரும்பாலான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் தற்போது கட்டிடங்கள் மற்றும் வகுப்பறைகளை அதிகபடுத்தியுள்ளதால் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது சாத்தியம் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் பெரியதாக இருப்பதால் மாணவர்கள் தகுந்த இடைவெளியை கடைபிடிக்கவும் ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவ/மாணவி மீதும் அதிக கவனம் செலுத்த முடியும் என்றும், போதுமான வகுப்பறைகள் இல்லாத பள்ளிகளில், பள்ளி செயல்படும் நேரத்தை 2 வேலைகளாக மாற்றி கொள்ளலாம், 25% பாடதிட்டங்கள் குறைக்கப்படும் என்றும்  தெரிவித்துள்ளார்.
மேலும் இணைய வழி கல்வியை அனைத்து மாணவர்களும் பயன்படுத்த முடியாது சூழல் உள்ளது. பெரும்பாலான மாணவர்களிடம் ஆன்ராய்ட் போன்கள் இல்லாத காரணத்தல் இணைய வழிக்கல்வியை நடைமுறை படுத்துவதில் சிக்கல் உள்ளது,  தேவைப்பட்டால் தமிழக அரசின் சார்பில் செயல்படும் கல்வி தொலைக்காட்சியின் மூலம் வகுப்புகளை எடுக்கலாம் என்றும் அருளானந்தம் கூறியுள்ளார்.
அரசாங்கம் கட்டாயா கல்வி உரிமை சட்டத்திற்க்கு 25% ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் படிக்க ஆதரவளிப்பதற்க்கு பதிலாக அந்த தொகையை அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்க்கு பயன்படுத்தி கொண்டால் இன்னும் பல மாணவர்கள் படிக்க அது உதவியாக இருக்கும் என்றும் தணிக்கையாளர் அருளானந்தம் தெரிவித்துள்ளார்.