தென் கொரிய அதிபருக்கு லஞ்சம் கொடுத்த புகாரை தொடர்ந்து பிரபல எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் துணைத்தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அந்நிறுவனத்தில்தெ

தென்கொரியாவில் தொண்டு நிறுவனங்களுக்கு தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெரும் தொகைகளை நன்கொடை பெற்றதாக அதிபர் அதிபர் பார்க் கியுன் ஹை மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது.

அதிபர் பார்க் கியுன் ஹையின் நெருங்கிய தோழி, சோய் சூன் சில், தனக்கும் அதிபருக்கும் உள்ள தொடர்பை பயன்படுத்தி பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த ஊழல் குற்றச்சாட்டைத்தொடர்ந்து அதிபர் 6 மாத காலத்துக்கு இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

அவர் அதிபராக நீடிப் பதா, கூடாதா என்பது குறித்து அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மொத்தம் 9 நீதிபதிகள் அடங்கிய அந்த நீதிமன்றத்தில் 6 நீதிபதிகள் பார்க் குவென் ஹை மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை உறுதி செய்து தீர்ப்பளித்தால் அவர் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்படுவார். இல்லையெனில் அவர் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றார்.

கடந்த 2015 ஜூலையில் தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங் சி அண்ட் டி நிறுவனத்துடன் செயில் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஒன்றிணைக்கப்பட்டது.

இந்த வர்த்தக நடவடிக்கைக்கு சாதகமாக செயல்பட அதிபர் பார்க் குவைன் ஹைக்கு நன்கொடை என்ற பெயரில் பெருந்தொகை கைமாறியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சாம்சங் நிறுவன தலைவர் லீ ஜே யாங்கிடம் அந்த நாட்டு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சியோலில் விசாரணை நடத்தினர்.

இந்த ஊழல் வழக்கில் சாம்சங் குழும நிறுவனங்களின் தலைவர் லீ குன் ஹீயின் மகனும், துணைத்தலைவருமான லீ ஜே யாங்கும் சிக்கியுள்ளனர்.

அவர் தங்கள் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படுவதற்காக அதிபரின் தோழி சோய் சூன் சில்லுக் 40 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.272 கோடி) லஞ்சம் தந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் காரணமாக லீ ஜே யாங் கைது செய்யப்பட்டுள்ளார். இது சாம்சங் குழுமத்துக்கு பின்ன டைவை ஏற்படுத்தி உள்ளது. சாம்சங்கின் துணைத் தலைவர், ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால்,  சாம்சங் நிறுவனத்தின் நிர்வாகம் தடுமாறத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள திடீர் குழப்பங்களால், நிர்வாகக் குழுவில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

ஊழல் குற்றச்சாட்டிற்காக, சாம்சங் நிறுவனத்தில் கைது செய்யப்படும் முதல் நபர், லீ.

லீ கைது செய்யப்பட்டதை அடுத்து, சாம்சங் நிறுவனத்தின்பங்குகள், கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வருகின்றன.