பிரேசிலியா

எய்ட்ஸ் தொற்றை கொரோனா தடுப்பூசிகள் அதிகரிக்கும் எனக் கருத்து தெரிவித்த பிரேசில் அதிபர் மீது அந்நாட்டு உச்சநீதிமன்றம் விசாரணை தொடங்கி உள்ளது.

பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரோ ஒரு சமூக வலைத் தள நேரலையில் கொரோனா தடுப்பூசிகள் எய்ட்ஸ் தொற்றை அதிகரிக்கும் எனக் கருத்து தெரிவித்தது கடும் எதிர்ப்பை கிளப்பியது.  இதையொட்டி முகநூல், யூ டியூப் ஆகிய தளங்கள் அவற்றின் பொய் செய்திகள் தடையின் கீழ் தற்காலிகமாக அவரை தடை செய்தன.

சயீர் ஏற்கனவே கொரோனா தடுப்பூசிகள் செயல்பாடு குறித்து கேள்விகள் எழுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.  அவர் கொரோனாவை தவறாக கையாண்டதாக ஒரு விசாரணை நடந்துக் கொண்டு வருகிறது.   எய்ட்ஸ் மற்றும் தடுப்பூசி குறித்து அவர் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி இவ்வாறு கருத்து கூறியது அவருக்கு மேலும் சிக்கலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பிரேசில் நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி அலக்சாண்ட்ரே டி மொரொஸ் அதிபரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் விசாரணைக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.   ஏற்கனவே ஒரு விசாரணையை மேற்கொண்டுள்ள சயீர் மீது மற்றொரு விசாரணை நடைபெற உள்ளதால் பிரேசில் நாட்டை கடும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.