பிரேசிலியா: பிரேசிலில், கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை, 21 லட்சத்தை எட்டி உள்ளது.
உலகளவில் அதிக கொரோனா தொற்று காணப்படும் நாடுகளில் 2வம் இடத்தில் பிரேசில் உள்ளது. அந்நாட்டில் 24 மணி நேரத்தில், புதிதாக, 23,529 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சமாக ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில், 716 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். இதுவரை 79,488 பேர் பலியாகி உள்ளனர். ஒரு வாரத்தில் மட்டும் 7,000 பேர் உயிரிழந்து உள்ளனர். 13 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக கொரோனா வைரஸ் பரவலின் மையமாக, பிரேசில் உள்ளதால் அமெரிக்காவை தாண்டிவிடும். எனவே, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது.
Patrikai.com official YouTube Channel